சசிகலா வரும் தேதியில் திடீர் மாற்றம் - பிப் 8ல் வரவேற்க ஒன்று கூடுங்கள் என டிடிவி தினகரன் அழைப்பு
சசிகலா வரும் தேதியில் திடீர் மாற்றம் - பிப் 8ல் வரவேற்க ஒன்று கூடுங்கள் என டிடிவி தினகரன் அழைப்பு
சென்னை: சசிகலாவின் வருகையை திருவிழா கோலம்பூண்டு வரவேற்போம். ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று தீயசக்தி கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் செய்திடுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார் டிடிவி தினகரன். சசிகலா பிப்ரவரி 7ஆம் தேதி தமிழகம் வரப்போவதாக நேற்று டிடிவி தினகரன் கூறிய நிலையில் அவர் 8ஆம் தேதி வரப்போவதாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். விடுதலைக்கு முன்பாக கொரோனா தொற்று ஏற்படவே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உடல் நலம் குணமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா பெங்களூருவில் பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
பிப்ரவரி 8ல் வருகை
பெங்களூருவில் இருந்து வரும் 7ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக நேற்று மதுரையில் பேசிய டிடிவி தினகரன் கூறிய நிலையில் சசிகலா வரும் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை.
Comments