தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க முயற்சி : தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு குற்றச்சாட்டு
தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க முயற்சி : தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு குற்றச்சாட்டு
சென்னை :மின் வாரியத்தில் உள்ள 9 மண்டலங்களையும் ஒருங்கிணைத்து தனியாருக்கு அளிக்க முயற்சி நடப்பதாக தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அதிர்ச்சி தெரித்துள்ளது. இது தொடர்பாக மின்வாரிய தலைவருக்கு தொழற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், ஏற்கனவே மின் வாரியத்தை 3ஆக பிரித்ததன் மீதே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 கம்பெனிகளாக பிரித்து தனியாருக்கு அளிப்பது போன்ற செய்திகள் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியம் மறு சீரமைப்பு சம்பந்தமாக வாரியம் அளித்த ஆலோசனையின் மீது தொழிற்சங்கங்கள் மாற்று யோசனைகளை வழங்கி உள்ளதன் மீது பேச்சுவார்த்தை தொடரவில்லை என்பதை குழு சுட்டிக் காட்டியுள்ளது. மின்சாரச் சட்டம் 2003ல் மின் வாரியங்கள் மறு சீரமைக்கப்படும் போது, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் கருத்துக்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை குழு நினைவு கூர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் மறு சீரமைப்பு தொடர்பாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கேட்டுக் கொண்டுள்ளது
Comments